பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.