"நாட்டை காப்பாற்ற துப்பாக்கி மட்டும் போதாது".. மீண்டும் ஒரு "ஹிஸ்டாரிக்" படம் - பா ரஞ்சித் தந்த அப்டேட்!

Ansgar R |  
Published : Sep 27, 2024, 09:52 PM IST

Pa Ranjith : பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தனது அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

PREV
14
"நாட்டை காப்பாற்ற துப்பாக்கி மட்டும் போதாது".. மீண்டும் ஒரு "ஹிஸ்டாரிக்" படம் - பா ரஞ்சித் தந்த அப்டேட்!
Pa Ranjith

கடந்த 2012ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் நான் பா. ரஞ்சித். அதற்கு முன்னதாக ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக அவர் பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாகவும் அடித்துள்ளார். தமிழ் திரையுலகை பொருத்தவரை வித்தியாசமான பல திரைப்படங்களை கொடுத்து அசத்திய இயக்குனர்களில் பா ரஞ்சித்தும் ஒருவர்.

லட்டு விவகாரம்.. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டாரோ? "நக்கல் மன்னனையே" வம்பிழுக்கும் மாறன்!

24
Kaala Movie

கடந்த 2014ம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் "மெட்ராஸ்" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தான் தொடர்ச்சியாக "கபாலி" மற்றும் "காலா" என்று இரண்டு திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் பா. ரஞ்சித். அந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

34
Director Pa Ranjith

தொடர்ச்சியாக தமிழில் "சார்பட்டா பரம்பரை", "நட்சத்திரங்கள் நகர்கிறது" மற்றும் "தங்கலான்" போன்ற வெற்றி படங்களை கொடுத்த பா. ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினார். தொடர்ச்சியாக பல படங்களை தயாரித்துள்ள ரஞ்சித் இப்பொது "தண்டகாரண்யம்" என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

44
Thandakaaranyam

இந்த படத்தை குண்டு படத்தை இயக்கி புகழ்பெற்ற அதியன் அதிரன் இயக்கவுள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் நடிக்கவுள்ளனர். இது ஒரு வரலாற்று கதை என்று கூறப்படுகிறது.

அம்புட்டு அழகு.. 'அமரன்' படத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சாய் பல்லவியின் இன்ட்ரோ வீடியோ!

Read more Photos on
click me!

Recommended Stories