Vijay Vishwa Debut Attakathi
தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்திய பா.ரஞ்சித்தின் 'அட்ட கத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் விஜய் விஷ்வா. இதை தொடர்ந்து குட்டி புலி படத்திலும் நடித்த இவர்... 2014-ஆம் ஆண்டு 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், விஜய் விஷ்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்ட பட்டது.
Vijay Vishwa Movies
இதை தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாயநதி மற்றும் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான சாயம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், அடுத்தடுத்து தரமான படங்களில் நடிக்க வேண்டும் என முழு வீச்சியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதே போல் தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்தாலும், தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் விஜய் விஷ்வா... கடந்த சில மாதங்களாக, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொண்டதால், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாட்டு பேரிடரில் போது இவரால் அங்கு செல்ல முடியாமல் போனது.
கைவிரித்த வாலி! 3 நாள் 100 பேரை காக்க வைத்த ஷங்கர்; இந்தியன் பட பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம்?
Vijay Vishwa Help:
எனவே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், முதல் வேலையாக, கேரள மக்களை சந்தித்து... தன்னால் முடிந்த அத்தியாவசிய பொருட்கள், மற்றும் புத்தாடைகளை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உறவுகளையும் உடைமைகளையும் இழந்த அவர்களது துயரத்தில் தோள் கொடுக்க…உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இந்த மண்ணில் கால் பதித்த போது என் கண்கள் குளமாகியது. இன்னும் தேடப்படும் சடலங்கள் எனது காலுக்கடியில் கூனாக இருக்கலாம் என்று என்னை அழைத்து சென்ற பினு என்பவர் கூறிய பின், ஒரு அடிகூட நகரமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.
Actor Vijay Vishwa
இருப்பினும் மனபாரத்துடன் கொண்டு சென்ற நிவாரண பொருட்கள், புத்தாடைகள் ,உணவு பொருட்கள் ,போர்வைகள் ,நைட்டிகள் ,வேஷ்டிகள் என இயன்றவரை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு் சென்று கொடுத்து வந்தேன். இயற்கையின் பேரழகோடு காட்சியளித்த வயநாடு, இன்று மயான அமைதியாக இருந்தது. இவ்வளவு பாதிக்கப்பட்ட பின்னரும் கூட, அந்த இடத்தில் இன்னும் தனது சொந்தங்களின் பிணங்களுக்காக காத்திருந்த பூர்வ குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பொருட்களை வழங்கிவிட்டு நூற்றுகணக்கான பிணங்களை அடக்கம் செய்த இடத்தி்ல் அஞ்சலி செய்துவிட்டு கனத்த இதயத்துடன் ஊர் திரும்பியதாக கூறினார்.
31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!
Wayanad People
தன்னுடைய வீட்டின் கிரகபிரவேச நிகழ்வு மறுநாள் இருந்தும் கூட, இரவு பகல் பாராமல் என்னுடன் ஆயிரம் கிலோமீட்டர ஒரே நாளில் பயணித்த தம்பி மோகன், கார்த்தி ஆகியோருக்கு நன்றி கூறியுள்ள விஜய் விஷ்வா, இந்த இடத்திற்க்கு வந்து உதவி செய்ய காரணமாக அமைந்த, தீப்தி குமார், பினு, சுதீப், போன்ற பலருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.