மேலும் எம்.எஸ்.வி-யை பார்க்கும் வரை சோத்துக்கே எனக்கு வழி இல்லை. எம்.எஸ்.வி-யால் வாய்ப்புகள் வர துவங்கியதும், சோறு தின்னவே எனக்கு நேரம் இல்லை என்பதையும் கவிதை துவமாய் கூறி இருந்தார் வாலி. எம்.ஜி.ஆரின் 64, படங்களுக்கும் சிவாஜியின் 80 படங்களுக்கும் பாடல் எழுதியுள்ள வாலி... நாகேஷ், சந்திர பாபு, ஜெமினி கணேசன், ஜெய் ஷங்கர் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கும்... விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் என மொத்தம் 3 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு உரியவர். தமிழ் சினிமாவில் சுமார் 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை இவர் நடித்த படங்களாகும். மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார்.
31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!