
அக்கால சினிமாவை ஒப்பிடும் பொழுது, ஒரு சில சுவாரசியமான விஷயங்கள் இக்கால சினிமாவில் இல்லை என்றே கூறலாம். முற்றிலும் மாறுபட்ட ஒரு "பிராக்டிகல்" சினிமாவை, மக்கள் ரசித்து வரும் இந்த காலகட்டத்தில், 90களில் துவக்கத்தில் அப்படியே தலைகீழான ஒரு சினிமா தான் இருந்தது என்றால் அது மிகையல்ல. படத்தில் வரும் ஒரு பாடல் என்று வரும் பொழுது, அதில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஓரமாக நிற்க, இடையில் ஒரு நடிகர் சிறப்பு தோற்றத்தில் ஒரு நடிகர் நடனமாடும் வழக்கம் அக்காலத்தில் பெரிய அளவில் இருந்து வந்தது.
உண்மையில் அந்த வகையான பாடல்களை மக்கள் பெரிய அளவில் ரசித்தனர் என்றே கூறலாம். அப்படி பல முன்னணி நடிகர்களுடைய திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலில் தோன்றி அசத்திய நடிகர் தான் ராம்ஜி. இவர் ஒரு சிறந்த நடன இயக்குனராகவும் இந்திய சினிமாவில் பயணித்தவர். 1991ம் ஆண்டு தமிழில் வெளியான கிழக்கு கரை என்ற படத்தின் மூலம் தான் இவர் டான்சராக அறிமுகமானார்.
31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!
கடந்த பல ஆண்டுகளாக இவர் திரைத்துறையில் டான்ஸராக பயணித்து வருகிறார் என்ற பொழுதும், பிரபல இசையமைப்பாளர் தேவா இசையில், இவருடைய நடனத்தில் வெளியான மூன்று பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக மாறி உள்ளது. இன்றளவும் அந்த பாடல்களுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "காதல் கோட்டை". தேவா இசையில் இந்த படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பெரிய அளவில் ஹிட்டானது. அந்த வகையில் "காதல் கோட்டை" படத்தில் வரும் "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" என்ற பாடலில் மிக நேர்த்தியாக நடனமாடி தமிழ் திரையுலகில் தனக்கான பிரேக்கிங் பாயிண்ட்டை உருவாக்கிக் கொண்டார் நடிகர் ராம்ஜி. அதுதான் முதல் முதலில் அவர் சோலோவாக நடனமாடி வெளியான பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு பிறகு தான் முன்னணி டான்சராக அவருக்கு பல வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டான நிலையில், 1997ம் ஆண்டு பிரபல நடிகர் முரளி, நடிகை கௌசல்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான "காலமெல்லாம் காதல் வாழ்க" என்கின்ற திரைப்படத்திலும் ஒரு அருமையான வாய்ப்பு ராம்ஜிக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "அண்ணாநகர் ஆண்டாள்" என்கின்ற பாடலை பாடகர் சபேஷ் பாட, அதற்கான பாடல் வரிகளை தேவா அவர்களே எழுதியிருந்தார்.
இந்த படத்தில் ஒலித்த ஆறு பாடல்களுக்கும் இசையமைத்தது தேவா தான். மேலும் இந்த அண்ணா நகர் ஆண்டாளு என்கின்ற பாடல் மிகச்சிறந்த கானா பாடலாக ராம்ஜிக்கு சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. மேலும் இந்த படத்திற்கு பிறகு தான் ராம்ஜிக்கு சின்னத்திரை வாய்ப்பும் பெறிய அளவில் கிடைத்தது. 1997ம் ஆண்டு ஒளிப்பரணா இன்ற சௌந்தராஜனின் மர்மதேசம் (விடாது கருப்பு) நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க துவங்கினார் ராம்ஜி.
மீண்டும் முரளியின் நடிப்பில், தேவா இசையில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான "கனவே கலையாதே" என்கின்ற படத்தில் வந்த "வாங்குடா 420 பீடா" என்கின்ற பாடலும் ராம்ஜிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களாக மாறியது. தேவா இசையில் மட்டுமல்லாமல் பல இசையமைப்பாளர்களின் இசையில் சோலோ பாடல்களில் ஆடி அதை வெற்றிப்பாடலாக மாற்றியவர் தான் ராம்ஜி.
இவருடைய மனைவி அமிர்தா தான் இப்பொழுது உலகநாயகன் கமல்ஹாசனின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இப்போது வரை தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பூவா தலையா" என்கின்ற நாடகத்தில் இவர் இப்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு தமிழ் படத்திற்காக.. 5 தயாரிப்பாளருடன் அட்ஜஸ்ட்மென்ட்! ஸ்ருதி ஹரிஹரன் கூறிய தகவல்!