தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான, நடிகை ஸ்ருதி ஹரிஹரன்... கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து, தற்போது வெளிப்படுத்தியுள்ள தகவல் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகையும், தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹரிஹரன்.. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'சினிமா கம்பெனி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கன்னடத்தில் லூசியா, தயோதிரி, சாவாரி 2 போன்ற படங்களில் நடித்தார். மேலும் தமிழில் 'நெருங்கி வா முத்தமிடாதே', 'நிலா', 'நிபுணன்', 'சோலோ', போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ருதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், 'தி வெர்டிக்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.