சிக்கலில் சிக்கிய கார்த்தி
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படம் இப்பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஹைதராபாத்தில் நடந்தபோது ஒரு சர்ச்சை வெடித்தது. நடிகர் கார்த்தி பங்கேற்க தனது மெய்யழகன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் "லட்டு வேணுமா சார்" என்று கேட்க, அய்யயோ ஆந்திராவில் லட்டு பற்றி பேசக்கூடாது.. அது ரொம்ப சென்சிட்டிவான விஷயம் என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே பேசினார்.
இந்த விஷயம் பவன் கல்யாண் கவனத்திற்கு செல்ல, நடிகர்கள் பொதுவெளியில் கவனமாக பேசவேண்டும், சனாதனம் பற்றிய விஷயங்களை பற்றி பேசும்போது, 100 முறை நன்கு யோசித்து பேசவேண்டும்" என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினார். அவருடைய அந்த பதிலுக்கு உடனே பதில் கொடுத்த கார்த்தி, நடந்த விஷயத்திற்காக வருந்துவதாக தெரிவித்தார். இந்த சூழலில் தான், கார்த்திக்கு நன்றி கூறி அவருடைய மெய்யழகன் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பவன் கல்யாண்.