வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, ராணா டகுபதி அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு படம் அறிவிக்கப்படும்போதே அதன் எதிர்பார்ப்பு எகிறுகிறது என்றால், அது வெற்றிமாறன் படமாகத்தான் இருக்கும். அதிலும் முதன்முறையாக சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, 'வடசென்னை' யுனிவர்ஸ் கதை எனப் பல ஆச்சரியங்கள் 'அரசன்' படத்தில் ஒளிந்திருக்கின்றன. ஆனால், இப்போது அந்த ஆச்சரியங்களுக்கு நடுவே ஒரு அதிர்ச்சித் தகவலும் கசிந்து இணையத்தையே அதிர வைத்துள்ளது.
25
திடீர் விலகல் - என்ன நடந்தது?
வெற்றிமாறன் படங்களில் நடிப்பதையே பல நடிகர்கள் தவமாக இருக்கும்போது, இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். சமீபத்தில் ஒரு விழாவில் கூட, "வெற்றிமாறன் சார் சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டேன்" என நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். ஆனால், இப்போது அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக வரும் செய்திகள் ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது கால்ஷீட் பிரச்சனை.
35
காத்திருந்த படக்குழு.. கைநழுவிய வாய்ப்பு!
விஜய் சேதுபதியின் தேதிகளுக்காக படக்குழு சுமார் 15 நாட்கள் வரை காத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால், அவரால் உடனடியாகத் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் படத்தை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதிக்கு மாற்றாக யார் வருவார்? என்ற கேள்விக்கு, தெலுங்குத் திரையுலகின் டாப் ஸ்டார் ராணா டகுபதி பெயர் அடிபடுகிறது. 'பல்லால்தேவா'வாக மிரட்டிய ராணா, சிம்புவுக்கு இணையாக அந்த வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது
55
அரசன் படத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
இப்படத்தில் சிம்பு கபடி வீரராக ஒரு கெட்டப்பிலும், நடுத்தர வயது மனிதராக மற்றொரு கெட்டப்பிலும் அசத்த உள்ளார். இதற்காக அவர் எடுத்துள்ள புதிய லுக் ஏற்கனவே வைரலாகி வருகிறது.மதுரை மற்றும் கோவில்பட்டியில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது. விஜய் சேதுபதி இல்லாதது ஏமாற்றம் என்றாலும், ராணா - சிம்பு - வெற்றிமாறன் என்ற புதிய காம்பினேஷன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.