புதிய படத்தில் இருந்து திடீர் என விலகிய நயன்தாரா? இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்!

First Published | Nov 17, 2021, 5:52 PM IST

நடிகை நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக கூறப்பட்ட படத்தில் இருந்து, அவர் திடீர் என விலகியதால் அந்த வாய்ப்பு இளம் நடிகைக்கு சென்றுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.   

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம், 'அண்ணாத்த' இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் கெத்து காட்டியுள்ளது.

இதை தொடர்ந்து நயன்தாரா அவரது காதலர் 'விக்னேஷ் சிவன்' இயக்கத்தில் உருவாகியுள்ள, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

மேலும், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நயன்தாரா... ஷாருகானுடன் பாலிவுட் திரைப்படத்திலும், பாகுபலி வெப் சீரிஸ் மற்றும் வடிவேலுவின் ‘எலி’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது திடீர் என நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் கைது செய்யப்பட்டதால் யாரும் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நயன்தாராவின் கால் ஷீட்டில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு நயன்தாராவால் தேதி ஒதுக்க முடியவில்லையாம். ஆகையால் அவருக்குப் பதிலாக தற்போது 'விக்ரம் வேதா' மற்றும் 'மாறா' உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிது.

நாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில், தற்போது அவருக்கு பதில் இளம் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீ நாத் கமிட் ஆகியுள்ளதாக  அடித்த ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!