சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா நடிகையும், சூப்பர் மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவதற்கு என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்க்கு ஏற்ற போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தார். தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக.... வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி வாயிக்கு வந்தது எல்லாம் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குனர் அன்பரானுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுளளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தன்னை பற்றி எந்த வதந்தி வந்தாலும் அது குறித்து விளக்கம் கொடுக்கும் மீரா மிதுன், இதுகுறித்தும் விளக்கம் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.