கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமேதந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190நாடுகளில் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளம் மூலமாகவெளியாக உள்ளது.
தற்போது அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் நிலையில், ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்து வருகிறார்.
இதையடுத்து சென்னை திரும்பும் தனுஷ் கைவசம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43, அண்ணன் செல்வராகவன் உடன் ஒரு படம் மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உடன் தலா ஒரு படம் என பிசியாக கால்ஷூட் ஒதுக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்தி படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது தெலுங்கு திரையுலகினரின் கவனம் திரும்பியிருக்கிறது. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். தற்போது அந்த வரிசையில் தனுஷ் இணைந்திருக்கிறார்.
டோலிவுட்டின் பிரபல இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தை நாராயண்தாஸ் நரங், புஸ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.