தனுஷ், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அணியும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா?

First Published | Aug 22, 2023, 10:01 PM IST

சமீப காலமாக பிரபலங்கள் முதல் இளைஞர்கள், ஆன்மீக வாதிகள் என பலர்... கருங்காலி மாலை அணிவதை பார்க்க  முடிகிறது. சரி இந்த மரத்தால் செய்யப்படும் மாலைக்கு உள்ள மகத்துவத்தை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.
 

கடந்த சில வருடங்களாக  தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும்.. தனுஷ், லோகேஷ் கனகராஜ், சூரி, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள், மற்றும் சினிமாவில் சாதிக்க துடிக்கும் பிரபலங்கள் பலர் இந்த கருங்காலி மாலையை அணிவதை பார்க்க முடிகிறது. இது ஆன்மீகத்தின் மீது உள்ள நம்பிக்கை என சிலர் நினைக்கலாம்... ஆனால் அறிவியல் ரீதியாகவே இந்த கருங்காலி மரத்தால் ஆன மணிகளை அணிகிறார்கள் என கூறப்படுகிறது. 

சரி, அப்படி இந்த கருங்காலி மரத்திலும் , அந்த மரத்தால் உருவாகும் பொருள்களிலும் அப்படி என்ன தான் அற்புத மகிமைகள் நிறைந்துள்ளது என பார்க்கலாம். கருங்காலி  நேர்மறை சக்திகளை தனக்குள் உள்வாங்கும் தன்மை கொண்டது என்பதால், இந்த மரத்தில் பூஜை பொருட்கள் செய்து, அதனை வைத்து வழிபடுவதை வழக்கமாக சிலர் வைத்துள்ளனர். அதே போல் இந்த கருங்காலி மரத்தால் செய்யப்படும் மாலை, காப்பு , தாயத்து, பிரேஸ்லெட், வளையல் போன்றவை உங்கள் உடலில் இருப்பது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இதன் பூ, பட்டை , வேர், மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருந்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது.

தாத்தா சிரஞ்சீவிக்கு... பிறந்த சில மாதத்தில் பார்த் டே வாழ்த்து கூறிய மெகா பிரின்சஸ்! வைரலாகும் போட்டோ!

Tap to resize

இந்த கருங்காலி மாலையை ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் அணியலாம்.  இப்படி அணிவதால் உடம்பில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலில் இருந்து விடுபடலாம்.  இந்த மாலை நம் உடலில் பட்டு, மரத்தில் உள்ள பாசிட்டிவ் எனெர்ஜியை  நமக்குள்ளும் ஊடுருவ செய்து, நம்மை பாசிட்டிவான நபர்களாக மாற்றுகிறதாம். சமீப காலமாக இந்த கருங்காலி மாலையை ஆன்மீக வாதிகள் பலர் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதே போல் மிகவும் கோபமாக நடந்து கொள்ளும் நபர்கள் மற்றும் நெகடிவ் எண்ணங்களால் அவதி படுபவர்களுக்கு இந்த மாலையை அணிவதால் நல்ல மாற்றத்தை உணர்வதாகவும் கூறுகிறார்கள்.

இந்த கருங்காலியானது நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்குரியதாம்,  இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கருங்காலி அணிவதால் நமக்கு கிடைக்கும் என சில ஆன்மீக கதைகளும் உண்டு. கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது என்பதால் தான், இதனை அனைத்து கோயில்களிலும், கும்பாபிஷேகத்திலும், கருங்காலி கட்டைகளை கோபுர கலசங்களில் உள்ளே போடுவார்கள். இதனால் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களை இடி மின்னல் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்பாடமல் இந்த கலசங்கள் கவசமாக மாறி காக்கிறதாம்.

தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ! பூஜை மற்றும் படப்பிடிப்பு குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

இந்த கருங்காலி மாலையை அணிவது, நம் இரத்த ஓட்டத்தை சுத்தம் செய்து,  ஜீரண சக்தியை அதிகரிப்பதாகவும் பசியை தூண்டும் திறன் இதற்க்கு உண்டு எனவும் கூறுகிறார்கள். அதே போல் இதில் இருக்கும் தன்மை பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் சீர் செய்வதாகவும். ஆண்,பெண் மலட்டுத் தன்மையை நீக்கி குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் வல்லமை கொண்டது எனவும் கூறுகிறார்கள். அதே போல்  பெண்கள் இதனை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆண்கள் இதனை அணிவதால் அவர்களின் ஆண்மை சக்தி அதிகரித்து உடலை உறுதியாக வைக்கிறதாம்.

இந்த மாலையை அணிவது பில்லி சூனியம் போன்ற... எதிர்மறை விஷயங்களை முறியடிக்கும் தன்மை கொண்டதாம். அதே போல், இந்த மாலையை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. இது இயற்கையாக ஒரு மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாலை என்பதால்... சாதி - மத தடை இன்றி, யார் வேண்டுமானாலும் அணியலாம். கருங்காலி மாலை அணிய நினைப்பவர்கள், அதை வாங்கி வந்து பாலில் சில மணிநேரம் ஊறவைத்து விட்டு அணிவது மிகவும் சிறப்பு.

விஜய் டிவியை காப்பி அடிக்கிறதா சன் டிவி? விரைவில் முடிவுக்கு வரும் சீரியலின் சீசன் 2 பணிகள் மும்முரம்!
 

இதன் சிறப்புகளை அறிந்து தான், கடந்த ஒரு வருடமாக... கருங்காலி மாலை அணிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக... தமிழ் திரையுலகை சேர்ந்த, லோகேஷ் கனகராஜ், விக்கிரம், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த கருங்காலி மாலையை விரும்பி அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!