நயன்தாராவை போல் மாறுகிறாரா தனுஷ்? தன் பட ஆடியோ லாஞ்சுக்கே ஆப்சென்ட் ஆனது ஏன்?

Published : Feb 11, 2025, 11:59 AM IST

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ளாதது ஏன் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
நயன்தாராவை போல் மாறுகிறாரா தனுஷ்? தன் பட ஆடியோ லாஞ்சுக்கே ஆப்சென்ட் ஆனது ஏன்?
இயக்குனராக ஜொலிக்கும் தனுஷ்

நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். அவர் இதுவரை பவர் பாண்டி, ராயன் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் பா.பாண்டி திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இது தனுஷின் 50வது படமாகும். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

24
தனுஷின் அடுத்த படம்

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படம் தயாராகி உள்ளது. அப்படத்தின் பெயர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. அப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷின் அக்கா மகன். மேலும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்...  ஓடிடி,யில் நானும் ரெளடி தான்...ஆனாலும் ஒரு சிக்கல்...ஏமாற்றத்தில் ரசிகர்கள்

34
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் அருண் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் படக்குழுவினரும் இந்த ஆடியோ லாஞ்சில் பங்கேற்றனர். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. 

44
தனுஷ் ஆப்செண்ட் ஆனது ஏன்?

இதைப்பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா தான் தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிடுவார். தற்போது அவரைப் போல் தனுஷும் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டாரா என விமர்சித்து வந்தனர். ஆனால் தனுஷ் வராததற்கான காரணம் என்னவென்றால் அவர் தற்போது ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அவரால் பங்கேற்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம் தனுஷ். அதுமட்டுமின்றி அவர் விரைவில் மற்றொரு படத்தையும் இயக்க உள்ள தகவல் இந்த ஆடியோ லாஞ்ச் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... லவ்வுக்கும் - லவ் ஃபெயிலியருக்கும் நடுவுல சிக்கும் ஹீரோ? 'NEEK' படத்தின் ஜாலியான ட்ரைலர் வெளியானது!

Read more Photos on
click me!

Recommended Stories