Dhanush : என்னது இவங்க மறுபடியும் சேரப்போறாங்களா..! குட் நியூஸ் உடன் காத்திருக்கும் தனுஷ்

Published : Mar 19, 2023, 12:46 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், விரைவில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்ல உள்ளாராம்.

PREV
14
Dhanush : என்னது இவங்க மறுபடியும் சேரப்போறாங்களா..! குட் நியூஸ் உடன் காத்திருக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ், தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். இவர் அண்மையில் வாத்தி என்கிற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். அங்கு வாத்தி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வாத்தி திரைப்படம் ஒரே மாதத்தில் ரூ.118 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை நிகழ்த்தியது. நடிகர் தனுஷின் கெரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக இது மாறியது.

24

வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக் காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆசைக்காட்டி அம்போனு விட்டுட்டுபோன அஜித்... ஏகே 62-வை மறக்க முடியாமல் திண்டாடும் விக்னேஷ் சிவன்

34

இந்நிலையில், நடிகர் தனுஷ் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதன்படி பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்க உள்ளாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய கர்ணன் திரைப்படம் வேறலெவலில் வெற்றியடைந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

44

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும் இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த மாமன்னன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்க உள்ள படத்தையும் இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். இந்த படங்களையெல்லாம் முடித்த பின்னரே அவர் தனுஷ் உடன் கூட்டணி அமைப்பார் என கூறப்படுகிறது. கர்ணன் பட மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்... அப்போ தட்டிக்கொடுக்க யாருமே இல்ல... இப்போ வேறமாதிரி வந்திருக்கேன்- ‘பத்து தல’ விழாவில் சிம்புவின் ஃபயர் ஸ்பீச்

Read more Photos on
click me!

Recommended Stories