3-வது சந்திப்பிலேயே என்னை கற்பழித்தார்.... பிரபல இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு

Published : Mar 19, 2023, 10:22 AM IST

பிரபல இயக்குனர் தன்னை சந்தித்த மூன்றாவது மீட்டிங்கிலேயே தன்னை பலவந்தமாக கற்பழித்ததாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

PREV
14
3-வது சந்திப்பிலேயே என்னை கற்பழித்தார்.... பிரபல இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழிலும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்மீது தற்போது பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் கொடுத்துள்ள மீடூ புகார் தான் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பாயல் கோஷ், தமிழிலும் தேரோடும் வீதியிலே என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

24

இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தான் தற்போது பாலிவுட்டில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறி உள்ளதாவது : “தென்னிந்தியாவில் 2 தேசிய விருது வாங்கிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர இயக்குனர்களுடனெல்லாம் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் என்னை தொட்டு கூட பேசியதில்லை. ஆனால் பாலிவுட்டில் அனுராக் கஷ்யப் உடன் நான் ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை.

இதையும் படியுங்கள்... watch : நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜெர்மன் தூதரக அதிகாரிகள் - வைரல் வீடியோ

34

ஆனால் அவர் என்னை சந்தித்த மூன்றாவது மீட்டிங்கிலேயே என்னை பலவந்தமாக கற்பழித்தார். நடிகை பாயல் கோஷின் இந்த புகார் தான் பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது புகார் கூறுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது அது அனைத்தும் பொய் என மறுப்பு தெரிவித்திருந்தார் அனுராக் கஷ்யப்.

44

அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகைகள் டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் அந்த சமயத்தில் அனுராக் கஷ்யப்பிற்கு ஆதரவுக்கரம் நீட்டி இருந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் அவர்மீது பாயல் கோஷ் வைத்துள்ள குற்றச்சாட்டு பேசுபொருள் ஆகி உள்ளது. ஏற்கனவே தான் திடீரென தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து பாயல் கோஷ் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அப்போ தட்டிக்கொடுக்க யாருமே இல்ல... இப்போ வேறமாதிரி வந்திருக்கேன்- ‘பத்து தல’ விழாவில் சிம்புவின் ஃபயர் ஸ்பீச்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories