Published : Jun 18, 2025, 04:14 PM ISTUpdated : Jun 18, 2025, 05:59 PM IST
Dhanush Kuberaa Movie Story : தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் குபேரா படத்தின் கதை இது என்று தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி ரன்னிங் டைம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
Dhanush Kuberaa Movie Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது 51ஆவது படமான குபேரா படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
27
ரூ.120 கோடி பட்ஜெட்
கிட்டத்தட்ட ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பேன் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் தேவா என்ற ரோலில் நடித்துள்ளார். அதோடு மட்டுமின்றி பிச்சைக்காரன் கதாபாத்திரத்திலும் நடித்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
37
20 ஆம் தேதி திரைக்கு வருகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற போய்வா நண்பா மற்றும் கத கத கதை ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. நாளை மறுநாள் 20 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படம் திரையரங்கிற்கு பிறகு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
47
மிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை ரோமியோ பிக்சர்ஸ்
இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் கேரளா வெளியீட்டு உரிமையை துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தனுஷின் 2ஆவது தெலுங்கு படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் இசை உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
57
குபேரா படத்தின் படப்பிடிப்பு
குபேரா படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, அலிபிரி, கோவா, பேங்காக், மும்பை ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் இந்தப் படம் தனுஷிற்கு ஹிட் கொடுக்கும் என்று தெரிகிறது. அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த உலகம் காசு, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமின்றி நமக்கானதும் கூட என்று டயலாக் பேசுகிறார்.
67
மும்பை தாராவியை மையமாக கொண்ட அரசியல் த்ரில்லர்
இந்த நிலையில் தான் இந்தப் படமானது மும்பை தாராவியை மையமாக கொண்ட அரசியல் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் காலா படம் மும்பை தாராவியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குபேரா படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். இதையும் தாண்டி முதல் முறையாக சேகர் கம்முலா மற்றும் தனுஷ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.
77
ராயன்
இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு ஒரு இயக்குநராக தனுஷ் இயக்கத்தில் கடைசியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.