தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை தனுஷ் தான் இயக்குகிறார்.
தனுஷின் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மொட்டைத் தலையுடன் நடிக்கிறார் தனுஷ். ராயன் படத்தை முடித்த உடன் பாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ், அங்கு ஆனந்த் எல் ராய் இயக்கும் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... முதன்முதலில் உடலுறவு கொண்டது இவருடன் தான்... பலான விஷயத்தை பளீச் என போட்டுடைத்த நடிகை ஷகிலா
Dhanush
இதுதவிர தெலுங்கிலும் ஒரு படத்தை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கும் அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதோடு மாரி செல்வராஜ் உடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2-ம் பாகம், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2, நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் என அவரின் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
Dhanush
இந்நிலையில், நடிகர் தனுஷ், தன்னுடைய குடும்பத்தில் இருந்து புது ஹீரோவை அறிமுகப்படுத்த உள்ளாராம். தனுஷின் சகோதரிகளான விமலா, கார்த்திகா ஆகிய இருவரில் ஒருவரின் மகனை தான் ஹீரோவாக களமிறக்க உள்ளாராம் தனுஷ். மேலும் அப்படத்தை தனுஷே இயக்குவதோடு, அதில் கேமியோ ரோலிலும் நடிக்க உள்ளாராம். தன்னிடம் அட்வான்ஸ் கொடுத்து பல வருடங்களாக காத்திருக்கும் மதுரை அன்புவுக்காக இப்படத்தை எடுத்துக் கொடுக்க இருக்கிறாராம் தனுஷ். அவரைப் போலவே அவரது மருமகனும் சினிமாவில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ