மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார் ஷகிலா. இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவர் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன. அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வந்தன. இதன்பின்னர் மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கு தடை விதித்ததால், அவர் தமிழ்நாட்டில் செட்டில் ஆனார்.
பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷகிலா, தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவர ஷகி அம்மா என்று அழைத்ததால், அவருக்கு இருந்த கவர்ச்சி நடிகை இமேஜ் சுக்கு நூறாக உடைந்து போனது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஷகிலா. அதில் பயில்வான் ரங்கநாதன் முதல் ரெளடி பேபி சூர்யா வரை ஏராளமான பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் ஷகிலா.
இந்நிலையில், சமீபத்தில் அவரையே ஒருவர் பேட்டி எடுத்திருந்தார். அதில் ஷகிலாவிடம் நீங்கள் விர்ஜினா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஷகிலா இல்லை என சொன்னதும், அப்போ யாருடன் முதன்முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. எதற்கும் பயப்படாமல் துணிச்சலுடன் பதிலளிக்கும் ஷகிலா, அந்த கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்தார். அதன்படி, தன்னுடைய நண்பர் பால் ரிச்சர்ட் என்பவருடன் தான் முதன்முதலில் உடலுறவு கொண்டதாக போல்டாக கூறினார் ஷகிலா. அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலரில் டார்க் காமெடியில் கலக்கிய இந்த நபர் ஜிம் டிரெய்னரா... 12 வருட நண்பனை காத்திருந்து களமிறக்கிய நெல்சன்