நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தவர் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான பா.பாண்டி, ராயன் ஆகிய படங்கள் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது படமாக, சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்த படம், அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
எதார்த்தமான காதல் கதையில் உருவாகி இருந்த, இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போதும் போட்ட தொகையைக் கூட வசூலிக்காமல், திரையரங்கில் வாஷ் அவுட் ஆனது. ஆனால் இந்த படத்துக்கு போட்டியாக ரிலீசான 'டிராகன்' தற்போது ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.