Ajithkumar: அஜித் போடும் பக்கா பிளான்; ரேசிங்கில் எதிர்கால திட்டத்தை கூறிய அஜித்!

Published : Mar 22, 2025, 02:34 PM ISTUpdated : Mar 22, 2025, 05:33 PM IST

நடிகர் அஜித் அடுத்ததாக  Michelin 12H MUGELLO 2025 ரேஸில் பங்கேற்க உள்ள நிலையில், செய்தியாளரை சந்தித்து பேசி உள்ள தகவல் வைரலாகி வருகிறது.  

PREV
16
Ajithkumar: அஜித் போடும் பக்கா பிளான்; ரேசிங்கில் எதிர்கால திட்டத்தை கூறிய அஜித்!

அஜித் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லீ'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஏப்ரல் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3,000 முதல் 4,000 திரையரங்குகளில் ரிலீஸ் பண்ண படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

26
ஓய்வில்லாமல் நடித்த அஜித்:

கார் ரேஸில் பங்கேற்க தயாரான அஜித் அவசர அவசரமாக, 'குட் பேட் அக்லீ' மற்றும் 'விடாமுயற்சி' திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு தாமதம் ஆனது தான்  இதற்கு காரணம். கடைசி நேரத்தில் இரண்டு படத்தையும் முடித்துக் கொடுக்க கூடிய சூழ்நிலையில் அஜித் இருந்ததால், இரவு - பகல் பாராமல் பணியாற்றி வந்ததாக கூறப்பட்டது.

Ajith: 'குட் பேட் அக்லீ' படத்தில் அஜித்துக்கு மகனாக நடிக்கும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?
 

36
ஒரே நேரத்தில் விடாமுயற்சி - குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அஜித்குமார்:

அஜித் பகலில் விடாமுயற்சி படப்பிடிப்பிலும், இரவு நேரத்தில் 'குட் பேட் அக்லீ' படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். காரில் டிராவல் செய்த நேரங்களில் மட்டுமே மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் தூங்கிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

46
குட் பேட் அக்லீ ரசிகர்கள் ஆசையை பூர்த்தி செய்யுமா?

விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன உள்ள நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது. எனினும் அடுத்ததாக வெளியாக உள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படம் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாப்போல் இந்த படத்தின் டீசரும் அமைந்தது.

'குட் பேட் அக்லீ' படத்தின் கதை என்ன? அஜித்தின் கேரக்டர் பற்றி புட்டு புட்டு வைத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

56
அஜித் தற்போது Michelin 12H MUGELLO 2025 ரேஸில் கலந்து கொண்டுள்ளார்

சமீபத்தில் இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியபோது, படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் பல தகவல்களை வெளியிட்டார்.  இந்நிலையில் தற்போது அஜித்,  Michelin 12H MUGELLO 2025  Qualifying Session-னில் கலந்து கொண்ட பின்னர் பெண் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் வருங்கால ரேஸிங் திட்டம் குறித்து பேசியுள்ளார் (What are Ajith's future plans?).

66
எதிர்கால திட்டம் குறித்து பேசிய அஜித்:

இந்த பேட்டியில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ள அஜித் ரேசிங் அணியின் ஓனராகவும், டிரைவர் ஆகவும் தற்போது இருக்கிறேன். எதிர்காலத்தில் கார் ரேஸில் தொடர்ந்து பல வருடங்கள் பயணிக்க ஆர்வமாக இருக்கிறேன் என தன்னுடைய திட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் (Ajith spoke openly about everything from racing to acting). 

அக்டோபர் மாதம் வரை அஜித் தொடர்ந்து எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், ரேசிங்கில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளார். அதன் பின்னர், தான் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் என்றாலும், ரசிகர்களுக்காக அஜித் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

பவர் ஸ்டார் படத்தின் காப்பி தான் குட் பேட் அக்லியா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories