நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் பிளாகபஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் மாதமே ரிலீஸ் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் பண்டிகள் நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.