தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று சொல்லலாம். படப்பிடிப்பு சரியாக வரமாட்டார், நடிகைகளுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவார் என சிம்புவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதையெல்லாம் கடந்து தற்போது டாப் ஹீரோவாக ஜொலித்து வருகிறார் சிம்பு.
சிம்பு கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் உடல் எடையை குறைத்த பின்னர், ஆளே டோட்டலாக மாறிவிட்டார். ஷூட்டிங்கிற்கு தாமதம் இன்றி வருவதோடு மட்டுமின்றி, அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர் சிம்பு இயக்குனர் ஹரியிடம் திட்டு வாங்கியதாக ஷாக்கிங் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுப்பதில் வல்லவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்த திரைப்படம் தான் கோவில். இப்படம் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விக்ரம் நடித்த சாமி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த பின் ஹரி இயக்கிய திரைப்படம் தான் கோவில். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன.
இதையும் படியுங்கள்... அங்க தொட்டு.. இங்க தொட்டு... தளபதி தலையிலேயே கை வச்ச பயில்வான்! விக்கு மண்டைனு பங்கம் பண்ணும் - வீடியோ!
நடிகர் சிம்புவை கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தியதில் கோவில் படத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இப்படத்தில் நடித்தபோது இதன் ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே நடிகர் சிம்பு, ஷூட்டிங்கிற்கு தாமதமாக வர ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நாள் இதுபோன்று செய்ததால் டென்ஷன் ஆன இயக்குனர் ஹரி நான்காவது நாள் ஷூட்டிங்கின் போது சிம்புவை மறைமுகமாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நான்காவது நாள் காலை 9 மணி ஷூட்டிங்கிற்கு 11 மணிக்கு மேல் வந்துள்ளார் சிம்பு. செம்ம டென்ஷன் ஆன ஹரி, எங்கடா அந்த மடப்பய என தன் உதவி இயக்குனரை அழைத்து இருக்கிறார். அப்போது சிம்புவும் அருகில் இருந்திருக்கிறார். அந்த உதவி இயக்குனர் வந்ததும், எத்தன மணிக்குடா ஷூட்டிங்னு கேட்க, அவர் 9 மணிக்கு சார்னு சொல்லியிருக்கிறார். அப்பறம் ஏண்டா நீ 11 மணிக்கு வர. காசு வாங்குறேல்ல, உன் வேலைய நீ தான கரெக்டா செய்யனும். இனி லேட்டா வந்த தொலைச்சுப்புடுவேன் என சொல்லியிருக்கிறார் ஹரி.
இதை அருகில் இருந்து பார்த்து ஷாக் ஆன சிம்பு. ஹரி தன்னை தான் மறைமுகமாக திட்டுகிறார் என புரிந்துகொண்டு அடுத்த நாளில் இருந்து கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங்கில் ஆஜராகி விடுவாராம். கோவில் பட ஷூட்டிங் சமயத்தில் நடந்த விஷயத்தை தற்போது பயில்வான் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 56 வயதில் அஜித் பட ஹீரோயினோடு ஜோடி போடும் நடிகர் ரஹ்மான்!