56 வயதில் அஜித் பட ஹீரோயினோடு ஜோடி போடும் நடிகர் ரஹ்மான்!

First Published | May 27, 2023, 12:05 AM IST

நடிகர் ரஹ்மான், சமீபத்தில் தான் தன்னுடைய 56-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக சோழன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த, ரஹ்மான், அடுத்ததாக இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது.

rahman

புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும்  ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு, தமிழில் அஜித்தின் ஏகன், ஜெயம் ரவியுடன் தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகவும் ரகுமானுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

அதிர்ச்சி... 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி!

Tap to resize

இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் பெரிய பொருட் செலவில்  தயாரிக்கிறார்.  இந்த படத்தின் இரண்டாம் கட்ட பட படப்பிடிப்பை பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.  #துருவங்கள் 16” ஒளிப்பதிவாளர்   சுஜித் சாரங் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்டத்தை தவிர,  மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க, அமல் K ஜோப் இயக்கும் 'ஏதிரே ' , சார்ல்ஸ் இயக்கும்   'சமாரா' மற்றும் தமிழில் டைரக்டர் சுப்பு ராம் இயக்கும் 'அஞ்சாமை ' , கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ' நிறங்கள் மூன்று ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் ' கண்பத் ' . ' குயின் ' புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும், டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள்.
ஹாட் கவர்ச்சியில்.. ஸ்வீட் புன்னகை! வாணி போஜன்

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரீசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக  பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது. நஜீம் கோயா இதனை இயக்குகிறார். '1000 பேபீஸ் ' என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரீஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!