மல்யுத்த வீராங்கனைகளுக்கு குரல்கொடுத்த நீங்க.. வைரமுத்து பற்றி பேசாதது ஏன்? கமலிடம் சின்மயி கேட்ட நறுக் கேள்வி

First Published | May 27, 2023, 12:52 PM IST

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட கமல்ஹாசன், வைரமுத்து பற்றி பேசாதது ஏன் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தவர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி மீடூ புகார் தெரிவித்ததை அடுத்து வைரமுத்துவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கும் தரமான பதிலடி கொடுத்து வருகிறார் சின்மயி.

இந்த நிலையில், டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... ரிஸ்க் எடுக்குறதுலாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி... ராதிகா - வடிவேலு இணைந்து வெளியிட்ட ஜாலி ரீல்ஸ் வீடியோ இதோ

Tap to resize

அதில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லத்து அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என பதிவிட்டு இருந்தார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்த சின்மயி, தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கு துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படியுங்கள்... எங்கடா அந்த மடப்பய... ஷூட்டிங்கிற்கு லேட்டா வந்த சிம்புவை லெப்ட் ரைட் வாங்கிய இயக்குனர் ஹரி

Latest Videos

click me!