தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் மற்றும் முன்னணி நடிகரான தனுஷ் ஆகியோரின் தந்தை கஸ்தூரிராஜா இன்று, தன்னுடைய திருமண நாளை மனைவி விஜயலட்சுமி உடன் இணைந்து கொண்டாடியுள்ளார் இதுகுறித்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.
இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் - மீனா நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, சோலையம்மா, தாய் மனசு, வாசுகி, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, கும்மி பாட்டு, உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்.. தமன்னாவுடன் சிரஞ்சீவி!
மேலும் ஒரு சில படங்களில் நடிகராகவும், சில படங்களில் இசையமைப்பாளராகவும், சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவரை தொடர்ந்து, கஸ்த்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன்... அப்பாவின் பாணியிலேயே பட இயக்குனராகவும், இளைய மகன் தனுஷ் நடிகராகவும் திரையுலகில் நுழைந்து வெற்றிக்கொடியை நாட்டினர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் தோட்டத்தில் தன்னுடைய தாய் - தந்தைக்காக சுமார் 150 கோடி செலவில் அரண்மனை போன்ற வீடு ஒன்றை கட்டிக் கொடுத்தார். அதில் தான் தற்போது இவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர்.
மூத்த மகன் செல்வ ராகவன் மற்றும் அவருடைய மூன்று குழந்தைகள், மனைவி கீதாஞ்சலி, ஆகியோர் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் கீதாஞ்சலி வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.