எனக்கு மட்டும் கல்யாணம் ஆகலேனா... கண்டிப்பா தனுஷை தான் கரம்பிடித்து இருப்பேன் - தனுஷ் மீதான காதலை சொன்ன நடிகை

First Published | Jun 9, 2023, 3:00 PM IST

இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர், நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரேகா நாயர், பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறாததால், சைடு ரோலில் நடித்து வந்தார். கடந்தாண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் நடிகை ரேகா நாயர், அரை நிர்வாணமாக நடித்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை நடிகரும், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சிற்கு வாக்கிங் வந்த பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.

இதையும் படியுங்கள்... ஏன்டி நான் படம் பண்ணும்போது நீ இல்லாம போன... ரேகா நாயரிடம் வருத்தப்பட்ட பாரதிராஜா


இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ரேகா நாயருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை ரேகா நாயர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக நடிகை ரேகா நாயர் பேசியது வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் கூறியதாவது : “தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது தனுஷ் தான். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் தனுஷை திருமணம் செய்திருப்பேன். அந்த அளவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட தனுஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் உங்களை ரொம்ப பிடிக்கும் என சொன்னேன். பலரும் அவரிடம் இதனை சொல்லி இருக்க வாய்ப்புள்ளதால், அவர் அதனை சாதரணமாக எடுத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி சொன்னதற்கான மதிப்பு என்னை தவிர யாருக்கும் தெரியாது. அந்த காதலை மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம்” என கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு பின் துரத்திய பிரச்சனைகள்... நயன் - விக்கி ஜோடி கடந்த ஓராண்டில் சிக்கிய சர்ச்சைகள் இத்தனையா..!

Latest Videos

click me!