நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விரைவில் முடிய உள்ளது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை வேகமாக முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மறுபுறம் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவலும் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகை திரிஷா தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கொடி படத்துக்கு பின்னர் தனுஷும், திரிஷாவும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர்.
இப்படத்தில் தனுஷ் முதன்முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க விரும்பியது திரிஷா இல்லையாம். அவருக்கு முன்னர் நடிகர் கங்கனா ரனாவத்தை தான் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க தனுஷ் விரும்பினாராம். ஆனால் கங்கனா வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பின்னர் தான் திரிஷாவை கமிட் செய்துள்ளார் தனுஷ். நடிகை கங்கனா தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்... என்றென்றும் மறக்கமாட்டேன் - தமன்னா நெகிழ்ச்சி