நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதுதவிர தமன்னா, புஷ்பா பட வில்லன் சுனில், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், ரோபோ சங்கர், யோகிபாபு, வஸந்த் ரவி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படி ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் ஒருபக்கம் வரிசைகட்டி நிற்க, மறுபுறம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஜெயிலர் திரைப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், ரஜினியின் கெரியரில் இதுவரை இல்லாத அளவு அதிகளவிலான திரையரங்குகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். தற்போது அதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடித்துள்ள நடிகை தமன்னா, இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது ரஜினி தனக்கு கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார். அதன்படி நடிகர் ரஜினிகாந்த், தமன்னாவுக்கு ஆன்மீக பயணத்திற்கான புத்தகம் ஒன்றில் கையெழுத்திட்டு அதனை பரிசாக அளித்தாராம். ரஜினி தந்த இந்த பரிசை என்றென்றும் மறக்கமாட்டேன் என தமன்னா நெகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கைக் குழந்தையை கவர்ந்த விஜய்... தளபதியின் நடனத்தை பார்த்ததும் அழுகையை நிறுத்தி கியூட்டாக சிரித்த குழந்தை