ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 900 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆன முதல் படம் என்கிற சாதனையையும் ஜெயிலர் படைத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி உள்ள ஜெயிலர் படத்தைக் காண திரைப்பிரபலங்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்க்க ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்தனர். அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் முதலில் தியேட்டருக்கு எண்ட்ரி கொடுத்த பின்னர் நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகனுமான ராகவா லாரன்ஸ் வந்தார். இதையடுத்து தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோர் தனியாக பி.எம்.டபிள்யூ காரில் வந்தனர்.
இதையும் படியுங்கள்... ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ
இதையடுத்து தான் நடிகர் தனுஷ் இன்னோவா காரில் வந்திறங்கினார். தனுஷ் வந்த உடனே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜெயிலர் என்கிற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்து மாஸ் எண்ட்ரி கொடுத்தார். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், முதன்முறையாக ஒரே தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளதை பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரையும் இணைந்த ஜெயிலருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்துக்கு பின்னர் ரஜினிகாந்தின் அடுத்த படமாக லால் சலாம் தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அக்கட தேசம் முதல் அமெரிக்கா வரை... ஜெயிலர் ரஜினி ரசிகர்கள் அலப்பறையான கொண்டாட்டங்கள் இதோ