பிறந்தநாள் காணும் தேவி ஸ்ரீ பிரசாத்.. டிஎஸ்பியின் சிறந்த 5 தமிழ் ஆல்பங்கள்

Published : Aug 02, 2022, 04:47 PM IST

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இசையமைப்பாளருக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு படங்களில் மாஸ்காட்டி வரும் டி எஸ் பி யின் தமிழ் ஹிட் ஆல்பங்கள் சில இங்கு...

PREV
15
பிறந்தநாள் காணும் தேவி ஸ்ரீ பிரசாத்.. டிஎஸ்பியின் சிறந்த 5 தமிழ் ஆல்பங்கள்
sachin movie

விஜயுடன் தேவி ஸ்ரீ பிரசாத் திருப்பாச்சி, சச்சின் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளா.ர் இதில் திருப்பாச்சியில் ஒரு சில பாடல்களுக்கு இசையமைத்த இவர், சச்சின் படத்திற்கு முழு இசையும் செய்திருந்தார். காதல் மெல்லிசை, குத்துப் பாடல், உணர்ச்சிகரமான பாடல் எனக்கு அழகாக இசைகளை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார். இதை அடுத்து தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தமிழில் திருப்புமுனைகள் கிடைத்தன.

25
Aaru

ஹரி இயக்கிய ஆறு படத்தில் சூர்யாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாவது முறையாக இணைந்து இருந்தார். ஆக்ஷன் நிரம்பி இருந்த ஆறு படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையால் படத்தை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றினார். அவரது பாடல்களும் பின்னணி இசைகளும் படத்தை  அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய உதவியது.. படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் எனலாம். 

மேலும் செய்திகளுக்கு...கமலின் அரசியல் த்ரில்லரை இயக்கும் அஜித் பட இயக்குனர்

35
santhosh subramaniam

ஜெயம் ரவி ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் இளசுகளுக்கு மிகவும் பிடித்த படமாகும். இந்த படம் தெலுங்கு பொம்மரிலு படத்தின் ரீமேக். இதில் டிஸ்பியின்  அசத்தலான இசை ஒவ்வொரு இளைஞர்களின் இதயத்தையும் துடிக்க வைத்தது. அவர் தமிழ் பார்வையாளர்களை ஈர்க்க இது சரியான பிளாட்பாரமாக அமைந்திருந்தது.

45
singam movie

ஆறு படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருந்தார் டி எஸ் பி. காவல் அதிகாரியாக சூர்யா வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை அதிரடி காட்சிகளை இன்னும் உயர்த்தி இருந்தது. அவரின் திரைப்படப் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் செய்திகளுக்கு... ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!

55
veeram

சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசை பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் குடும்பத்தின் பிணைப்புகளை விளக்கி இருந்தது.  படத்தில் இவரது இசை நன்றாக ஸ்கோர் செய்திருந்தது. பாடல் மற்றும் பின்னணி இசைக்காக ஆற்றல் மிக்க இசையமைப்பாளரின் இசை பிரபலமானது. மேலும் தீம் ட்ராக் பின்னர் பல தமிழ் படங்களில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...புஷ்பா 2-வில் வில்லியாக மிரட்ட வரும் தேசிய விருது வென்ற நடிகை... விஜய் சேதுபதிக்கு ஜோடியும் இவங்கதானாம்

Read more Photos on
click me!

Recommended Stories