பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் பெரும், நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது, அதனை கண்டறிந்து, அதில் இருந்து வெளியே வர என்ன செய்தார் என்பதை... சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒளியில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர்... "நான் ஒரு என்னுடைய துறையில் உயர்ந்த நிலையில் இருந்தேன், எல்லாமே சரியாக தான் நடந்து கொண்டிருந்தது, அதனால் நான் வெறுமையாக உணர்தேன். நான் அப்படி உணர்ந்ததற்கு எந்த காரணமும் இல்லை. வெளிப்படையான காரணமும் இல்லை, ஆனால் நான் எந்த காரணமும் இன்றி பல சமயங்களில் போவேன். அப்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து நான் எழ விரும்பியது இல்லை. தூக்கம் என்னை தப்பிக்க வைக்கும் வழியாக உணர்வேன். சில சமயங்களில் நான் தற்கொலை செய்து கொள்ள கூட முயன்றுள்ளேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!
அந்த கடினமான காலங்களில் தனது அன்புக்குரியவர்கள் எவ்வாறு தன்னைக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றி அந்த மேடையில் பேசிய தீபிகா, "எனது பெற்றோர் பெங்களூரில் வசிக்கிறார்கள், அவர்கள் என்னைச் சந்திக்கும் வரும் ஒவ்வொரு முறையும் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை மட்டுமே காட்ட விரும்பினேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம்... எல்லாம் சரியாகிவிட்டது போல, நான் எப்போதும் தைரியமாக முன்னோக்கிச் செல்வேன். அவர்கள், மீண்டும் பெங்களூருக்கு சென்று சோர்ந்து விடுவேன்.
இதுகுறித்து முதலில் என்னிடம் கேள்விகளை கேட்டது என்னுடைய அம்மா தான். என் அம்மா என்னிடம் வழக்கமான சுகாதாரக் கேள்விகளை கேட்டார். அப்போது அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை... காரணம் எந்த ஒரு பிரச்னையும் எனக்கு இல்லை . ஆனால் வெறுமையாகவே உணர்தேன். என்னுடைய பிரச்னையை அறிந்து எனக்கு என் அம்மா உதவினார் அப்போது அவரை அந்த கடவுள் அனுப்பியதாகவே உணர்தேன் என கூறியுள்ளார். தீபிகா படுகோன் மனஅழுத்தம் காரணமாக, தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.! வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்.!