நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கிட்டாததால், மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்தார்.