விடுதலை 2 படத்தை காலி பண்ண டிசம்பர் 27ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் 12 படங்கள்

Published : Dec 23, 2024, 10:37 AM IST

December 27 Tamil Movie Releases : 2024-ம் ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
18
விடுதலை 2 படத்தை காலி பண்ண டிசம்பர் 27ந் தேதி போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் 12 படங்கள்
Theatre Release Tamil Movies on December 27

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்த விடுதலை 2 திரைப்படம் கடந்த வாரம் தியேட்டரில் சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வருகிறது. அப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகிற டிசம்பர் 27-ந் தேதி டஜன் கணக்கிலான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

28
Alangu

அலங்கு

எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் அலங்கு. மனிதனுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்து உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.

38
The Smile Man

ஸ்மைல் மேன்

ஷியாம் பிரவீன் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஸ்மைல் மேன். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். திரில்லர் திரைப்படமான இதுவும் வருகிற டிசம்பர் 27-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

48
Rajakili

ராஜா கிளி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமையா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ராஜாகிளி. இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கதை, வசனம், இசை ஆகியவற்றையும் தம்பி ராமையா தான் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் டிசம்பர் 27-ல் ரிலீஸ் ஆகிறது.

58
Thiru Manickam

திரு மாணிக்கம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் திரு மாணிக்கம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படமும் வருகிற டிசம்பர் 27 அன்று திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... ஓடிடியில் பெரும் தொகைக்கு விற்பனையான டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

68
Kooran

கூரன்

நிதின் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கூரன். இப்படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் டிசம்பர் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.

78
Barroz

பரோஸ்

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இயக்கி நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் தான் பரோஸ். இப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைத்து உள்ளார். ஆண்டனி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது.

88
Mazhaiyil Nanaigiren

சிறு பட்ஜெட் படங்கள்

ரெபா மோனிகா ஜான் நடித்த மழையில் நனைகிறேன் மற்றும் இது உனக்கு தேவையா, நெஞ்சு பொறுக்குதில்லையே, பீமா சிற்றுண்டி, கிச்சா சுதீப் நடித்த மேக்ஸ் மற்றும் வாகை ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... வசூலில் சரிவை சந்தித்த விடுதலை 2; வெற்றிமாறன் படத்துக்கே இந்த நிலைமையா?

click me!

Recommended Stories