Viduthalai Part 2, Manju Warrier Tamil Movies
Manju Warrier Originally Supposed to act in Kandukondain Kandukondain : தமிழ் நடிகைகளுக்கு இல்லாத வரவேற்பு மற்ற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது. நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் ஆகியோரை சொல்லலாம். தமிழ் சினிமாவில் இப்போது மற்ற மொழியைச் சேர்ந்த நடிகைகளின் வருகை தான் அதிகமாக இருக்கிறது. அது ஹீரோயின் ரோலாக இருந்தாலும் சரி, துணை நடிகையாக இருந்தாலும் சரி தமிழ் ஹீரோயின்களைக் காட்டிலும் அவர்களுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கிறது.
Manju Warrier Filmography, Vettaiyan
சாய் பல்லவி தமிழகத்தில் பிறந்திருந்தாலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில் கூட அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் கூட இணைந்து நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. சாய் பல்லவியின் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்தப் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
Kandukondain Kandukondain, Rajiv Menon
இதே போன்று தான் இப்போது மஞ்சு வாரியரின் வருகையும் தமிழ் சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் நாகர்கோயிலில் பிறந்த மஞ்சு வாரியர் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்திருந்தார். கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இப்போது வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 2 படத்திலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Asuran, Viduthalai Part 2, Manju Warrier Tamil Movies
இந்த நிலையில் தான் மஞ்சு வாரியர் அசுரன் படத்திற்கு முன்னதாகவே தமிழில் எண்ட்ரி கொடுக்க இருந்தாராம். அதுவும் அஜித் படமாம். ஆம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித் படத்தில் நடிக்க இருந்தாராம். இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், மணிவண்ணன், ரகுவரன் ஆகியோர் பலர் நடிப்பில் 2000ல் திரைக்கு வந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
Manju Warrier, Ajith Kumar, Thunivu
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதற்கு இயக்குநர் ராஜீவ் மேனனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அந்த ரோலுக்கு முதலில் நடிகை மஞ்சு வாரியரை அப்ரோஜ் செய்திருக்கிறார். அவரும் கதை, ஹீரோ என்று படத்தை பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு ஓகேயும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரால் நடிக்க முடியவில்லையாம். அதன் பிறகு நடிகை சௌந்தர்யாவை கேட்கவே, அவர் மறுத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராயை கேட்டிருக்கிறார்கள். அவரும் கதையெல்லாம் கேட்டுவிட்டு நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். இது குறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியிருக்கிறார்.