OTT Releases : டிசி முதல் தி கோர்ட் வரை... செப்டம்பர் முதல் வாரமே ஓடிடியில் என்னென்ன படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்?

Published : Aug 31, 2026, 08:24 AM IST

This Week OTT Releases : லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி முதல் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆகும் தி கோர்ட் வரை இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
16
This Week OTT Release Movies and Web Series

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமே ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி+ உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், டாக்குமென்டரிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெளியாக உள்ளன. குறிப்பாக ‘தி ஜென்டில்மென்: சீசன் 2’, ‘காந்தாரி’, ‘தி கோர்ட்’, ‘ஜகமே சங்கீதம்’, ‘Mayday’ உள்ளிட்ட படைப்புகள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. செப்டம்பர் 1 முதல் 4 வரை எந்தெந்த கன்டென்ட்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகின்றன என்பதை பார்க்கலாம்.

OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!

26
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

DC

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இதில் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக வாமிகா கப்பி மற்றும் சஞ்சனா நடித்திருந்தனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், வருகிற செப்டம்பர் 4-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

1000-lb Sisters: Season 9

1000-lb Sisters என்ற பிரபல ரியாலிட்டி தொடரின் 9வது சீசன் செப்டம்பர் 1, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஏமி மற்றும் டாமி ஸ்லாட்டன் சகோதரிகளின் வாழ்க்கை, உடல் எடை தொடர்பான சவால்கள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது.

Jared Freid: The Family Plan

காமெடி ரசிகர்களுக்காக Jared Freid: The Family Plan ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் செப்டம்பர் 1, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. குடும்பத்துடன் பயணம் செய்வது, பெற்றோருடன் விடுமுறையை செலவிடுவது உள்ளிட்ட அன்றாட வாழ்க்கை அனுபவங்களை ஜாரெட் ஃபிரைட் தனது பாணியில் நகைச்சுவையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

36
இந்த வாரம் ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

Mayday

ரியான் ரெனால்ட்ஸ், கென்னத் பிரானா, மரியா பகலோவா உள்ளிட்டோர் நடித்துள்ள Mayday ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படம் செப்டம்பர் 4, அன்று ஆப்பிள் டிவி+ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பனிப்போர் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், அமெரிக்க கடற்படையின் பைலட்டான லெப்டினன்ட் ட்ராய் ‘அசாசின்’ கெல்லி, ஒரு ரகசியப் பணிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்படுகிறார். ஆனால் அந்த மிஷன் திட்டமிட்டபடி நடைபெறாமல் போக, அவர் எதிரி நாட்டிலேயே சிக்கிக்கொள்கிறார்.

அங்கு முன்னாள் கேஜிபி ஏஜென்டான நிகோலாய் உஸ்டினோவை சந்திக்கும் ட்ராய்க்கு எதிர்பாராத நட்பு உருவாகிறது. பின்னர் இருவரும் இணைந்து அங்கிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளே ஆப்பிள் டிவி+ ஓடிடியில் வெளியாகும் ‘Mayday’ திரைப்படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

Untold Raygun: Breaking Badly

Untold Raygun: Breaking Badly டாக்குமென்டரி செப்டம்பர் 1, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ரேச்சல் ‘ரேகன்’ கன்னை மையமாகக் கொண்ட இந்த ஆவணப்படம், போட்டிக்குப் பிறகு அவரைச் சுற்றி உருவான மீம்ஸ், வதந்திகள் மற்றும் சர்ச்சைகளைப் பதிவு செய்கிறது.

Fito Páez: The World Within a Song

இசை ரசிகர்களுக்கான Fito Páez: The World Within a Song டாக்குமென்டரி செப்டம்பர் 3, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஸ்பானிஷ் மொழி இசையுலகில் பிரபலமான ஃபிட்டோ பேஸின் வாழ்க்கை, இசைப் பயணம், பாடல் உருவாக்கம், ரெக்கார்டிங் பணிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களை இந்த டாக்குமென்டரி பதிவு செய்கிறது.

The Gentlemen: Season 2

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் The Gentlemen: Season 2 வெப் சீரிஸ் செப்டம்பர் 3, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியோ ஜேம்ஸ், காயா ஸ்கோடெலாரியோ உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தனது தந்தையிடமிருந்து கிடைத்த சொத்து சாதாரணமானது அல்ல, அது போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருப்பதை எட்டி ஹார்னிமன் கண்டுபிடித்த பிறகு கதை விறுவிறுப்படைகிறது. புதிய சீசனில் எட்டி எதிர்கொள்ளும் புதிய எதிரிகள் மற்றும் அதனால் உருவாகும் சிக்கல்களே முக்கியக் கதைக்களமாக இருக்கின்றன.

46
ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

Gandhari

தப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள Gandhari ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் செப்டம்பர் 3, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தனது மகள் காணாமல் போன நிலையில், அவரைத் தேடி ஒரு தாய் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மையக்கதை.

மகள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் கும்பலை எதிர்கொள்ளும் அந்தத் தாயின் பயணம் எப்படிச் செல்கிறது என்பதைக் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளுடன் இப்படம் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Teenage Wasteland

Teenage Wasteland டாக்குமென்டரி செப்டம்பர் 4, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 1991-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தில், ஆசிரியர் ஃப்ரெட் இசக்ஸின் வழிகாட்டுதலுடன் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ளும் திரைப்படத் திட்டம் எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கிறது.

தங்கள் பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மோசடி ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

Earle Meets World

சோஷியல் மீடியா பிரபலம் அலிக்ஸ் ஏர்லை மையமாகக் கொண்ட Earle Meets World ரியாலிட்டி சீரிஸ் செப்டம்பர் 4, அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் மற்றும் பிசினஸ் சார்ந்த பொறுப்புகளையும் அவர் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறார் என்பதை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு காட்டுகிறது.

56
The Court

பரபரப்பான சட்டப் பின்னணியில் உருவாகியுள்ள The Court திரைப்படம் செப்டம்பர் 4, அன்று ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

யாழினி என்ற இளம் வழக்கறிஞருக்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது. திறமையான வழக்கறிஞரான தனது தந்தையின் நிழலில் வளர்ந்த அவர், ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் தனது சொந்த தந்தைக்கு எதிராகவே வாதாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

சமூகத்தின் கேலி, தன்னைப் பற்றிய சந்தேகம் என பல தடைகளை எதிர்கொள்ளும் யாழினி, உண்மைக்காகவும் நீதிக்காகவும் எப்படி போராடுகிறார் என்பதையே ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் ‘The Court’ திரைப்படம் மையமாகக் கொண்டுள்ளது.

66
Jagamae Sangeetham

இசை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட Jagamae Sangeetham வெப் சீரிஸ் செப்டம்பர் 4, அன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கர்நாடக இசையை தலைமுறைகளாகப் பின்பற்றி வரும் ஒரு குடும்பத்தின் பின்னணியில் கதை உருவாகியுள்ளது. தாத்தாவின் இசைப் பாரம்பரியத்தைத் தொடரும் பாலு, குடும்ப உறவுகள், பழைய ரகசியங்கள் மற்றும் தலைமுறைப் பகைகள் என பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் சிக்கிக் கொள்கிறான்.

கடந்த காலத்தில் புதைந்து கிடந்த பகைகள் மீண்டும் வெளிவரும்போது, குடும்பத்தின் இசைப் பாரம்பரியத்தை காப்பாற்றுவதா அல்லது தனக்கென புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற குழப்பம் பாலுவுக்கு ஏற்படுகிறது. இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ், மது, ஸ்ரீகாந்த் மேகா, அக்‌ஷய் லகுசானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories