டிஸ்கோ சாந்தி ஐட்டம் டான்சர் ஆனது எப்படி?
ஐட்டம் டான்சர்கள் மீது சமூக பாக்குற பார்வையே வேற. ஆனா டிஸ்கோ சாந்தி மாதிரி இருக்கறவங்க அத ஒரு கலைன்னு நெனச்சு அந்த டான்ஸ்ல தங்கள ஈடுபடுத்திக்கிட்டாங்க. அது அவங்களுக்கு சாப்பாடு குடுக்குற வேலையா இருந்துச்சு. டிஸ்கோ சாந்தி ஆரம்பத்துல லால் அமெரிக்காயில் (1989) படத்துல மலையாள நடிகர் மோகன்லாலோட சில முக்கியமான ரோல்ல நடிச்சாலும், நடிகையா சக்சஸ் ஆகல. ஆனா, முதல் படத்துக்கு அப்புறம் டிஸ்கோ சாந்திக்கு கவர்ச்சியான நடிகையா அங்கீகாரம் கிடைச்சுது. நிறைய படங்கள்ல டான்சரா நடிச்சாங்க. தமிழில் கமல், ரஜினி, தெலுங்கில் சிரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களோடு புயல கிளப்புற மாதிரி டான்ஸ் ஆடி ரசிகர்கள மகிழ்விச்சாங்க.