Cylinder Blast in Killer Movie Shoot : எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஹீரோவாக நடிக்கும் கில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தில் மதன் என்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் படக்குழுவினரையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'வாலி', 'குஷி' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக நடிகராக அதிக கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக 'மாநாடு' திரைப்படத்திற்குப் பிறகு வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திர வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. இதனால் படம் இயக்குவதை கிடப்பில் போட்டுவிட்டு நடிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்தி வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
44
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர்
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர் 'கில்லர்' என்கிற படத்தை இயக்கி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல மொழிகளில் உருவாகும் இந்த பான்-இந்தியா திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.