Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?

Published : Jun 03, 2026, 08:48 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வழிமறித்து அவரிடம் இருந்து பணத்தை திருடிச் சென்றுள்ளது ஒரு ரெளடி கும்பல். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் விட இருப்பதால் அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுத்து முத்து பணத்தை ரெடி பண்ண பம்பரமாய் சுழன்று வந்தார். அவரின் முயற்சிக்கு பலனாக அவர் ரெடி பண்ணிய பழைய கார்களுக்காக பைனான்சியர் ஒருவர் 38 லட்சம் பணத்தை கடனாக கொடுக்க சம்மதித்துள்ளார். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட முத்து வீடு நம் கைக்கு வரப்போகிறது என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார். மறுபுறம் சிந்தாமணிக்கும் முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயம் தெரியவருகிறது. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu : விசாலாட்சி போட்ட கண்டிஷன்; உண்ணாவிரதத்தை கைவிட்ட ஜனனி..!

25
பணத்தை தூக்க பிளான் போடும் சிந்தாமணி

சிந்தாமணியிடம் முத்து பணத்தை ரெடிபண்ணிய விஷயத்தை சொன்னது ரோகிணி தான். மனோஜ் மூலம் அவருக்கு கிடைத்த தகவலை அவர் சிந்தாமணியிடம் கூறியதோடு, நான் மனோஜ் உடன் சேரும் வரை அந்த வீடு அவங்க கைக்கு போகக் கூடாது என கூறுகிறார். அதற்கு சிந்தாமணி, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். பின்னர் வெளியே போனதும் தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு முத்து பணத்தை ரெடி பண்ணிய விஷயத்தை சொல்லி, அதை தூக்க பிளான் போடுகிறார்.

35
மீனாவின் கெட்ட கனவு

அடுத்த சீனில் முத்து 38 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்கிறார். அவர் அந்த பணத்தை மறுநாள் தன்னுடைய பைக்கில் எடுத்து செல்லும் போது அதை ஆட்டோவில் வந்த இருவர் திருடிச் செல்கிறார்கள். இதையடுத்து மீனா பதறிப்போய் தூக்கத்தில் இருந்து எழுகிறார். பின்னர் தான் பணம் திருடுபோனது மாதிரி அவர் கனவு கண்டது தெரியவருகிறது. இருப்பினும் பகல் கனவு பழிக்கும் என்பதால் பதற்றத்துடன் இருக்கும் மீனா, முத்துவிடம் தனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார்.

45
மீனாவிடம் இருந்து திருடிச் சென்ற கும்பல்

இதையடுத்து மறுதினம் மீனா கனவில் நினைத்தது போலவே இரண்டு பேர் பைக்கில் சென்ற மீனாவை வழிமறித்து அவரிடம் இருந்த பணப்பையை எடுத்துச் செல்கிறார்கள். இதனை முத்துவுக்கு போன் போட்டு சொல்கிறார் மீனா. முத்துவின் காரையும் பாலோ பண்ணி அதில் பணம் இருந்தால் எடுக்க, இரண்டு ஆட்களை செட் பண்ணி இருக்கிறார் சிந்தாமணி. ஆனால் முத்து விவரமாக காரில் செல்லாமல் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பைக்கில் கிளம்பிச் செல்கிறார். அவர் நேராக பைனான்சியரை பார்க்க செல்கிறார்.

55
முத்துவுக்கு காத்திருக்கும் சவால்

அங்கு சென்று அவரிடம் பணம் அவசரமாக வேண்டும் என முத்து கேட்க, அந்த பைனான்சியர் பணம் வந்துகொண்டிருப்பதாக சொல்கிறார். மறுபுறம் சிந்தாமணி வீட்டை ஏலத்திற்கு வீட வந்துவிடுகிறார். பின்னர் பைனான்சியருக்கு ஒரு போன் கால் வருகிறது. பணத்தை எடுத்து வந்தவர்கள் போலீசில் சிக்கிக் கொண்டதாக தகவல் வருகிறது. உடனே முத்து வேறுவழியின்றி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பணத்தை வாங்க கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆச்சு? முத்து பணத்துடன் வந்து வீட்டை மீட்டாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories