கவின் பொண்டாட்டி நானு... சூசக பதிவால் லாஸ்லியாவை சீண்டினாரா மோனிகா டேவிட்?

First Published | Aug 23, 2023, 3:29 PM IST

கவினின் மனைவி மோனிகா டேவிட் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

Losliya, Monicka david, Kavin

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த சீசன் சக்சஸ் ஆனதற்கு லாஸ்லியாவும் ஒரு காரணம் என சொல்லலாம். ஏனெனில் அந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் கவின் - லாஸ்லியாவின் காதலும் ஒன்று. ஒரு கட்டத்தில் லாஸ்லியாவின் தந்தை நேரில் வந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

Kavin Losliya breakup

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது உருகி உருகி காதலித்த கவின் - லாஸ்லியா ஜோடி, அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு, தங்களது காதலுக்கும் எண்ட் கார்டு போட்டு பிரிந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவருமே சினிமாவில் பிசியானதால் இவர்களது காதல் விவகாரமும் அப்படியே காத்துவாக்கில் கடந்து போனது. இதனிடையே கடந்த ஒரு மாதமாக கவின் - லாஸ்லியா காதல் பற்றி மீண்டும் பேச்சு எழத் தொடங்கியது.

Tap to resize

losliya friend monicka david

இதற்கு காரணம் கவினின் திருமண அறிவிப்பு தான். நடிகர் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்த உடனே, ரசிகர்கள் அனைவரும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூற தொடங்கினர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், மோனிகா டேவிட், லாஸ்லியாவின் தோழி என்பது தான். அவர் இவரின் ஸ்டைலிஷ்டாகவும் பணியாற்றி இருக்கிறார் என்கிற தகவல் அறிந்து பலரும் ஷாக் ஆகினர்.

இதையும் படியுங்கள்... ஜோராக நடந்து முடிந்தது ஹீரோ கவினின் கல்யாணம்... காதல் ஜோடியின் கலக்கல் கிளிக்ஸ் இதோ

kavin monicka david marriage

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி நடிகர் கவினுக்கும் மோனிகா டேவிட்டுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் நெல்சன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

Losliya Insta post

கவினின் திருமணநாளன்று நடிகை லாஸ்லியா, ஆச்சர்யபடாமல் இருக்க முடியவில்லை என குறிப்பிட்டு ஒரு சூசக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கவினின் திருமணத்தை குறிப்பிட்டு தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறி வந்தனர்.

monicka david insta story

இந்த நிலையில், நடிகர் கவினின் மனைவி மோனிகா டேவிட் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில் அதிகாரப்பூர்வமாக கவினின் பொண்டாட்டி ஆகிவிட்டேன் என குறிப்பிட்டு தான் தாலியோடு இருக்கும் செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கவே மோனிகா இந்த பதிவை போட்டிருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஜீவானந்தத்தின் மறுபக்கத்தை கூறிய ஜனனி..! மனம் உடைந்த ஈஸ்வரி..? முன்னாள் காதலன் பற்றி வாய்திறப்பாரா!

Latest Videos

click me!