கணவரை கழட்டிவிட்டு... ஜாலியாக ஃபாரின் டூர் போன ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி - வைரலாகும் போட்டோஸ்

First Published | Aug 23, 2023, 1:35 PM IST

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

aarti ravi

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருவதால், நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்றுகொண்டு நடித்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. 

Jayam ravi wife

நடிகர் ஜெயம் ரவி கைவசம் தற்போது இறைவன், சைரன், ராஜேஷ் இயக்கும் படம், ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் என அரை டஜன் படங்கள் உள்ளன. இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதன் காரணமாக குடும்பத்தினருடன் கூட சுற்றுலா செல்ல முடியாத நிலையில் இருக்கிறார் ஜெயம் ரவி.

இதையும் படியுங்கள்... 11 வருஷ லவ்... காதல் பரிசோடு புரபோஸ் பண்ணிய சீரியல் நடிகர்... அன்போடு ஏற்றுக்கொண்ட சமந்தா - வைரலாகும் வீடியோ


aarti ravi parents

கணவர் பிசியாக இருப்பதால், அவரை கழட்டிவிட்டு, தன்னுடைய மகன்கள் மற்றும் தாய், தந்தையோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. முதலில் இங்கிலாந்து சென்ற அவர், அங்கு மகன்களுடன் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

aarti ravi vacation photos

இதற்கு அடுத்தபடியாக துபாய்க்கு குடும்பத்தினருடன் சென்ற ஆர்த்தி, அங்கு போட் ரைடு சென்றபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போல் ஜொலிப்பதாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

aarti ravi sons

மறுபுறம் ஜெயம் ரவி எங்கே என்கிற கேள்வியும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அதோடு ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் மளமளவென வளர்ந்துவிட்டதை பார்த்த ரசிகர்கள், வாயடைத்துப் போய் உள்ளனர். ஆர்த்தி ரவியின் இந்த புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... எடையை குறைத்து ஜம்முனு இருக்கும் மஞ்சிமா..எடையையும் தாண்டி 'அந்த' பயிற்சியில் ஒளிந்திருக்கும் ரகசியம் இதோ..

Latest Videos

click me!