Vijay, Lokesh Kanagaraj
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தளபதி விஜய்யின் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் ரிலீஸ் நெருங்கி வருவதால், தற்போதே அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
Leo movie cast and crew
லியோ படத்தை பார்த்து அனைவரும் பிரம்மிக்க காரணம் அப்படத்தின் நட்சத்திர பட்டாளம் தான். இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், மலையாள நடிகர்கள் மேத்யூ தாமஸ் மற்றும் ஜோஜு ஜார்ஜ், நடிகைகள் பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், பிக்பாஸ் பிரபலங்கள் ஜனனி, சாண்டி மாஸ்டர், பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப் என இந்த லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... ரவுடியுடன் ரஜினிக்கு சகவாசமா? உபி-யில் பல கொலைகளில் தொடர்புடைய டான்-ஐ சந்தித்த சூப்பர்ஸ்டார் - பின்னணி என்ன?
KPY Bala
இந்த நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் புது வரவாக இணைந்திருப்பவர் தான் பாலா. கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான பாலா, லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கிய பாலா, லியோ படம் மூலம் அடுத்த லெவலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
KPY Bala in Leo
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் பணியாற்றினாலும், திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தவறுவதில்லை. இதற்கு முன்னர் கைதி படத்தின் மூலம் விஜய் டிவி பிரபலம் தீனாவுக்கு முக்கிய கதாபாத்திரம் அமைத்துக் கொடுத்தார். அதேபோல் லியோ படம் மூலம் பாலாவுக்கு சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி... நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டதா?