எம்ஜிஆரின் கலை அரசி முதல் மாதவனின் ராக்கெட்ரி வரை... இந்திய சினிமா தந்த வியத்தகு விண்வெளிப் படங்கள் ஓர் பார்வை

First Published | Aug 23, 2023, 2:40 PM IST

சந்திரயான் 3 விண்கலத்தை பற்றி இந்தியாவே பெருமைகொள்ளும் நிலையில், இந்திய சினிமாவில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பற்றி பார்க்கலாம்.

Indian space movies

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் அதன் இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் இந்த அற்புதமான தருணத்தில், விண்வெளியை மையமாக வைத்து இந்திய திரையுலகில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கலை அரசி

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் தமிழில் தான் எடுக்கப்பட்டது. கலை அரசி என்கிற அப்படத்தில் எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 1963-ம் ஆண்டு காசிலிங்கம் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அந்த சமயத்தில் ஒரு ஆச்சர்ய படைப்பாகவே பார்க்கப்பட்டதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது.


கோய் மில் கயா

ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிபெற்ற விண்வெளி திரைப்படம் தான் கோய் மில் கயா. ராக்கேஷ் ரோஷன் இயக்கிய இந்த ரொமாண்டிக் ஸ்பேஷ் டிராமா திரைப்படம் அந்த ஆண்டின் அதிக வசூலை வாரிக்குவித்த படமாகவும் அமைந்தது.

அந்தாரிக்‌ஷம் 9000 KMPH

ஜகன் ஷக்தி இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் மிஷன் மங்கள். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் ஜகன் ஷக்தி. அத்திட்டத்தை போல் இப்படமும் வெற்றி பெற்றது. இதில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... கணவரை கழட்டிவிட்டு... ஜாலியாக ஃபாரின் டூர் போன ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி - வைரலாகும் போட்டோஸ்

மிஷன் மங்கள்

ஜகன் ஷக்தி இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் மிஷன் மங்கள். இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் ஜகன் ஷக்தி. அத்திட்டத்தை போல் இப்படமும் வெற்றி பெற்றது. இதில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

டிக் டிக் டிக்

சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் தான் டிக் டிக் டிக். சிறு கோளால் பூமிக்கு ஏற்படும் ஆபத்தை அணு ஏவுகணை கொண்டு தடுக்க முயலும் குழுவினரின் விண்வெளி பயணத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.

ராக்கெட்ரி

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை பல உச்சங்களுக்கு கொண்டு சென்ற விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ராக்கெட்ரி. இப்படத்தை நடிகர் மாதவன் இயக்கியதோடு, இதில் நம்பி நாராயணனாகவும் நடித்திருந்தார். இதில் ஷாருக்கான், சூர்யா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். 

இதையும் படியுங்கள்... எடையை குறைத்து ஜம்முனு இருக்கும் மஞ்சிமா..எடையையும் தாண்டி 'அந்த' பயிற்சியில் ஒளிந்திருக்கும் ரகசியம் இதோ..

Latest Videos

click me!