கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

Published : Nov 01, 2022, 08:02 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் தற்போது புது வரவாக பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளார்.

PREV
14
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், சுகன்யாவும் நடித்திருந்தனர். இதுதவிர கஸ்தூரி, செந்தில், கவுண்டமணி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

24

பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் மீண்டும் தொடங்கியது. இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்...  2 கோடிக்கு கூட ஒர்த் இல்ல... ஆனா 200 கோடி சம்பளம் வாங்குறாங்க - சூப்பர்ஸ்டார் நடிகரை வெளுத்து வாங்கிய கங்கனா

34

இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், தற்போது புதிய அப்டேட்டாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக் அப் போடும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார். அவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும், இதற்கு முன் ரஜினியின் தர்பார் படத்தில் யோகராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... புனீத் ராஜ்குமார் கடவுளின் குழந்தை... கொட்டும் மழையிலும் விசில் பறக்க பேசிய ரஜினி - வைரல் வீடியோ இதோ

Read more Photos on
click me!

Recommended Stories