கூலி முதல் கிங்டம் வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 மூவீஸ் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

Published : Sep 16, 2025, 02:59 PM IST

கூலி, சையாரா, கிங்டம் உள்பட கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.

PREV
14
Top 5 Most Watched Movies and Web Series on OTT

ஓடிடி தளங்களின் வளர்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி மூலம் தனி வருவாய் வருவதால், ஆரம்பத்தில் இதை எதிர்த்தவர்களே தற்போது ஆதரிக்கத் தொடங்கி உள்ளனர். இந்தியில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 8 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கிற ரூல் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 4 வாரங்களிலேயே எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. அப்படி கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.

24
டாப் 5-ல் கூலி

ஓடிடியில் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி முதல் 14ம் தேதி வரை அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம், வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை சையாரா என்கிற பாலிவுட் படம் பிடித்துள்ளது. பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் கடந்த வாரம் தான் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது. இதற்கு ஒரே வாரத்தில் 55 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 47 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.

34
அதிக வியூஸ் அள்ளிய படங்கள்

ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் பட்டியலில் இன்ஸ்பெக்டர் ஜெண்டே என்கிற இந்திப் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு நெட்பிளிக்ஸில் 25 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. அடுத்ததாக நான்காவது இடத்தில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் முந்தைய வாரம் முதலிடத்தில் இருந்தது. கடந்த வாரம் இப்படத்திற்கு 23 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. ராஜ்குமார் ராவ் நடித்த மாலிக் திரைப்படம் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படம் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

44
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்

Only Murders in the Building என்கிற அமெரிக்க வெப் தொடரின் ஐந்தாவது சீசன் தான் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த வெப் தொடர் 8 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் Saare Jahan Se Accha என்கிற இந்தி வெப் தொடர் 9 லட்சம் வியூஸ் உடன் 4ம் இடத்தில் உள்ளது. தமன்னா நடித்த Do You Wanna Partner என்கிற வெப் தொடர் அமேசான் பிரைமில் 12 லட்சம் வியூஸ் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. Half CA என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் எம் எக்ஸ் பிளேயரில் 20 லட்சம் வியூஸ் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை Wednesday வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடருக்கு 22 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories