Upendra Wife Priyanka : கூலி படத்தில் காலீசா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்காவின் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.
டிஜிட்டல் பயன்பாடு நமது வேலையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆனால், ஹேக்கர்களின் தொல்லைகளும் அந்த அளவுக்கு அதிகரித்துள்ளன. எவ்வளவு கவனமாக இருந்தாலும் ஹேக்கர்கள் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். அறிமுகமில்லாத போன் நம்பரை எடுப்பதே இப்போது கடினமாகிவிட்டது. போனை எடுத்தவுடன் வங்கிக் கணக்கைக் காலி செய்யும் ஹேக்கர்கள், அது இது என்று பேசி போனை ஹேக் செய்து விடுகிறார்கள். அந்த வகையில் கூலி படத்தில் காலீசாவாக நடித்த உபேந்திராவின் குடும்பமும் தற்போது ஹேக்கர்கள் வசம் சிக்கி உள்ளது.
24
உபேந்திரா எச்சரிக்கை
தற்போது, ரியல் ஸ்டார் உபேந்திராவின் (Upendra) மனைவியும், நடிகையுமான பிரியங்கா (Priyanka) உபேந்திராவின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்த உபேந்திரா, பிரியங்கா உபேந்திராவின் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது எண்ணிலிருந்து எந்த அழைப்பு வந்தாலும் நம்ப வேண்டாம். அவர்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கும் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களை அலர்ட் செய்துள்ளார்.
34
என்ன நடந்தது?
உபேந்திராவின் மனைவி பிரியங்கா ஆன்லைனில் ஏதோ ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு காலையில் ஒரு போன் வந்துள்ளது. ஆர்டர் வந்துவிட்டது என்று பிரியங்கா நினைத்துள்ளார். அவர்கள் சொன்னது போல் செய்துள்ளார் பிரியங்கா. ஹேஷ்டேக் அழுத்தி, அந்த எண்ணை அழுத்துங்கள், இந்த எண்ணை அழுத்துங்கள் என்றெல்லாம் கூறியுள்ளனர். கூரியர் வந்திருக்கலாம் என்று பிரியங்கா அவர்கள் சொன்னபடியே செய்துள்ளார். ஹேக்கர்கள் எளிதாக பிரியங்காவின் போனை ஹேக் செய்துள்ளனர்.
உபேந்திரா அந்த எண்ணுக்கு அழைத்ததால், உபேந்திராவின் போனும் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உபேந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில், பிரியங்கா மற்றும் எனது போன்கள் இரண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம். போலீசில் புகார் அளிப்போம். எங்கள் இருவரின் போனிலிருந்தும் உங்களுக்கு அழைப்பு வந்தால், மெசேஜ் வந்தால், யாராவது பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று உபேந்திரா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எச்சரிக்கையாக இருங்கள் என்று உபேந்திரா கூறியுள்ளார்.