ரஜினியை விட பணக்காரர்... 500 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் ராஜ வாழ்க்கை வாழும் காமெடி நடிகர் பற்றி தெரியுமா?

Published : Sep 16, 2025, 12:32 PM IST

Richest Comedian in India : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிகளவிலான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் காமெடி நடிகரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

PREV
15
India's Richest Comedian

சினிமாவில் ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களை விட ஒரு காமெடி நடிகர் பணக்காரராக இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் நிஜம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சொத்து மதிப்புடன் கூடிய காமெடி நடிகரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த நடிகர் கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இவர் திரையில் தோன்றினாலே திரையரங்கில் சிரிப்பலை எழும். சமீபத்தில் தனது சுயசரிதையை வெளியிட்டார்.

25
யார் அந்த பணக்கார காமெடி நடிகர்?

அந்த நகைச்சுவை நடிகர் வேறுயாருமில்லை பிரம்மானந்தம் தான். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி இருக்கிறார் பிரம்மானந்தம். குறிப்பாக தமிழில் விஜய் நடித்த கில்லி படத்தில் வீட்டில் ஹோமம் செய்ய வந்திருப்பார். அப்போது விஜய்யை அவர் நெய் எடுத்துட்டு வரச் சொல்ல, அவரோ மண்ணெண்னையை எடுத்து வந்து கொடுத்து பிரம்மானந்தத்தை படாதபாடு படுத்துவார். அந்த காட்சிகளை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இப்படி பல ஐகானிக் காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற பிரம்மானந்தம் தான் இந்தியாவிலேயே பணக்கார காமெடி நடிகர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

35
கின்னஸ் சாதனை படைத்த பிரம்மானந்தம்

ஆந்திராவின் குண்டூரில் பிறந்த பிரம்மானந்தம், முதலில் தெலுங்கு விரிவுரையாளராக பணியாற்றினார். சிரஞ்சீவியின் 'சண்டப்பாய்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அவரது டைமிங் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. 'அஹ! நா பெல்லண்டா!', 'மன்மதுடு', 'தூக்குடு', 'ரேஸ்குர்ரம்' போன்ற படங்களில் அவரது பாத்திரங்கள் மறக்க முடியாதவை. 40 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

45
பிரம்மானந்தம் சொத்து மதிப்பு

பிரம்மானந்தம் 60 மில்லியன் டாலர் (சுமார் ₹516 கோடி) சொத்து சேர்த்து, இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகராக உள்ளார். இது பிரபாஸ் (₹300 கோடி), ரன்பீர் கபூர் (₹350 கோடி), ரஜினிகாந்த் (₹400 கோடி) ஆகியோரை விட அதிகம். தற்போது 69 வயதாகும் பிரம்மானந்தம், தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்றார். விரிவுரையாளராக தொடங்கி, இன்று இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர்.

55
ராஜ வாழ்க்கை வாழும் பிரம்மானந்தம்

பிரம்மானந்தத்திற்கு இவ்வளவு பணம் சினிமாவின் மூலம் மட்டும் கிடைக்கவில்லை. அவர் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஏராளமான வீடுகள், வணிக கட்டிடங்களையும் வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதமாதம் பல்க் ஆன தொகையை சம்பாதித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களும் உள்ளன. சினிமாவில் சம்பாதித்த பணத்தை தண்ணியாக செலவழிக்காமல், அதை சரியான இடத்தில் முதலீடு செய்ததால் தான் இன்று ராஜ வாழ்க்கை வாழ்கிறார் பிரம்மானந்தம்.

Read more Photos on
click me!

Recommended Stories