அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் வழக்கம் போல தனது பாணியில் மாஸாக இசையமைத்துள்ளார். திரைத்துரையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை எட்டிய நிலையில் அதனை கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.