லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் ஷோ தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் தொடங்கும், அதற்கு முன்னதாக வெளிநாடுகளில் கூலி படம் ரிலீஸ் ஆகிவிட்டது. வெளிநாட்டில் கூலி படம் பார்த்த ரசிகர்கள், தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
27
கூலி ட்விட்டர் விமர்சனம்
கூலி படத்தின் முதல் பாதி நல்லா இருக்கும்போது லோகேஷ் டச் இல்லையேனு ஃபீல் பண்ண தேவையில்ல. தலைவர், நாகர்ஜுனா மற்றும் அனிருத் இப்படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். நான் கம்மியான ஹைப்போடு படம் பார்க்க வந்ததே நான் எடுத்த சிறந்த முடிவு. மொத்தத்தில் முதல் பாதி நல்லா இருக்கு என பதிவிட்டுள்ளார்.
37
கூலி படம் எப்படி இருக்கு?
கூலி படம் ஒரு புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம். முதல் பாதி லோகியின் ட்விஸ்ட் மற்றும் மாஸ் காட்சிகள் கலந்து நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
கூலி படத்தின் முதல் பாதி முடிந்தது. ரெகுலரான கதை தான். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரைக்கதை மற்றும் கதை சொல்லல் மூலம் மேஜிக் நிகழ்த்தி உள்ளார். எனக்கு பிடித்திருக்கிறது. ரஜினியின் நடிப்பு, மாஸ் காட்சிகள், ஃபேன் மொமண்ட்ஸ், இண்டர்வெல் காட்சி, திரைக்கதை என அனைத்தும் பக்காவாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
57
கூலி எக்ஸ் தள விமர்சனம்
கூலி படத்தின் முதல் பாதி பார்த்த ரசிகர் ஒருவர், சாரே கொல மாஸு என பதிவிட்டு உள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், என்ன ஒரு அருமையான பர்ஸ்ட் ஹாஃப் என குறிப்பிட்டு, ஃபயர் எமோஜிகளை பறக்கவிட்டுள்ளார்.
67
கூலி ப்ரீமியர் ஷோ விமர்சனம்
கூலி படத்தின் முதல் பாதி விமர்சனத்தை பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ஆவரேஜான லோகேஷ் கனகராஜ் படம் தான். இருந்தாலும் ரஜினிகாந்தின் பவர்ஃபுல்லான பர்பார்மன்ஸும், அவரின் நகைச்சுவை கலந்த நடிப்பும் ரசிக்க வைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
77
கூலி பட விமர்சனம்
கூலி படத்தின் முதல் பாதி ஓகே தான். எனர்ஜிடிக் சூப்பர்ஸ்டார். ஸ்டைலிஷ் நாகர்ஜுனா, பர்பார்மர் ஸ்ருதி, அனிருத்தின் மஜாவான 4 பாடல்கள், காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. இண்டர்வெல் பிளாக் மற்றும் விண்டேஜ் பாடல்கள் பக்காவாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.