கெளதமன் கணபதி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன், மலையாள நடிகர் லால், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் தான் இந்த சரண்டர். இப்படத்திற்கு விகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை வி.ஆர்.வி குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் தர்ஷன். இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
24
சரண்டர் ட்விட்டர் விமர்சனம்
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு முன் தன் கைத் துப்பாக்கியை பிரபல நடிகர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. பரபரப்பாகிறது அந்த காவல் நிலையம். போலீஸ் அடுத்து என்ன செய்கிறது என்பதை பரபரப்பாக சொல்வது தான் சரண்டர் பட கதை. நடிகர்கள் தர்ஷன், லால், கவுஷிக் தவிர மற்றவர்கள் பெருசா அறிமுகம் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் அதை யோசிக்கவிடாமல் நேர்த்தியாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் கெளதமன் கணபதி என பாராட்டி உள்ளார்.
34
சரண்டர் படம் எப்படி உள்ளது?
படம் பார்த்த இயக்குனர் அறிவழகன் தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், சரண்டர் படம் கொடுத்ததற்காக இயக்குனர் கெளதமன் கணபதியை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். தமிழில் உங்கள் முதல் படமே யதார்த்தத்துடன் கூடிய ஒரு தீவிரமான திரில்லர் கதையாக உள்ளது. லால் சார், சரியான நடிகர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய பாத்திரம். தர்ஷன் எமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விகாஸின் இசை, மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, மனோஜின் ஆர்ட், ரேணுவின் எடிட், சந்தோஷின் ஆக்ஷன் என அனைவரும் சிறப்பாக செய்துள்ளார்கள் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
இந்த வாரத்திற்கான முதல் பரிந்துரை நடிகர் தர்ஷனின் சரண்டர். இறுக்கமான கதைக்களம் மற்றும் சிறந்த நடிகர்களுடன் கூடிய ஒரு அழகான, பரபரப்பான கிரைம் திரில்லர் படம் இது. தர்ஷன் ஒரு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக மிகச் சரியாக நடித்துள்ளார். தமிழ் சினிமா இன்னொரு நல்ல இளம் ஹீரோவைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. அதேபோல் இயக்குனர் கெளதமன் கணபதியும் ஈர்த்துள்ளார். சுஜித் சங்கர் இதில் வில்லனாக மற்றொரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சரண்டர் என்பது நீங்கள் ஒரு டிக்கெட்டுக்கு செலவிடும் பணத்திற்கு நிச்சயமாக மதிப்புள்ள ஒரு படம் என குறிப்பிட்டுள்ளார்.