சிவகார்த்திகேயன் தயாரித்த ‘ஹவுஸ்மேட்ஸ்’ காமெடியில் கலக்கியதா? சொதப்பியதா? விமர்சனம் இதோ

Published : Aug 01, 2025, 08:45 AM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன், அர்ஷா பைஜு, காளி வெங்கட் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
14
Housemates Twitter Review

தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். இப்படத்தை விஜயபிரகாஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக அர்ஷா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை ராஜவேல் இயக்கி உள்ளார். இதில் காளி வெங்கட், வினோதினி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேமம் பட இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் பார்த்த நெட்டிசன்கள் அதன் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

24
ஹவுஸ்மேட்ஸ் ட்விட்டர் விமர்சனம்

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “தமிழ் சினிமாவில் இந்த கான்செப்ட் புதிய முயற்சி அதில் வெற்றியும் அடஞ்சிருக்காங்க படக்குழு. எனக்கு ரொம்ப பிடிச்சதுக்கான காரணம் இப்படி ஒரு கான்செப்ட் அதை காமெடியாகவும் எமோஷனலாகவும் பெருசா எங்கயும் போர் அடிக்காத வகையில் திரைக்கதையை நகர்த்தி இறுதி கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கலங்கடித்து நெகிழிச்சியா படத்தை முடிச்சதுதான். படத்தோட ஆரம்பத்துல நாம ஒன்னு நினச்சு பாத்துட்டு இருப்போம் பட் இன்டெர்வல் வரும் போது வேற ஒன்னு சொல்லி எல்லாதையும் கனெக்ட் பண்ணி செம்மையா ஒரு இன்டெர்வல்.

காளி வெங்கட் வழக்கம் போல கலக்கிட்டார். நிறைய இடங்களில் பயங்கரமா சிரிக்கவும் வச்சிருக்கார். கடைசி கிளைமாக்ஸ்ல இவரும் வினோதினி ரெண்டும் பேரும் சேர்ந்து கலங்கடிச்சுருவாங்க. படத்தோட மியூசிக் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மிகப்பெரிய பலம். பிரேமம், நேரம் படத்தின் மியூசிக் டைரக்டர் ராஜேஷ் முருகேசன் இந்த படத்துல செம்மயா பண்ணி இருக்காரு. ஆரம்பத்துல சில சீன்ஸ் கொஞ்சம் அப்டி இப்டி இருந்தாலும் அதுக்கு அப்புறம் எங்கயும் போர் அடிக்காது. அதுவும் செகண்ட் ஹாப் செம்ம. கடைசியா எல்லாதையும் கனெக்ட் பண்ணது டைரக்டர் ஓட புத்திசாலித்தனம் அவளோ நல்லா எழுதியிருக்கார்.

தர்ஷன் ஒரு ஆக்டரா இந்த படத்தில் மெருகேறியிருக்கிறார். சினிமேட்டோகிராபர் மற்றும் எடிட்டர் இவர்களும் படத்திற்கு சிறப்பான வேலை செஞ்சிருக்காங்க. முதல் பாதியில் வரும் சில காட்சிகள்ல எந்த புதுமையும் இல்ல. துணை கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பா வடிவமைச்சிருக்கலாம். எல்லாருக்கும் இந்த கான்செப்ட் புரியுமா தெரியல ஆனா அது ஒரு பெரிய குறையா இருக்காது நம்புறேன். கண்டிப்பா குடும்பத்தோட பார்த்து என்ஜாய் பண்ண ஒரு அருமையான படம். முக்கியமா எமோஷன்ஸ் & ஹியூமர் சூப்பரா வொர்க்கவுட் ஆகியிருக்கு. இந்த வீக்கெண்ட்க்கு ஒரு நல்ல படம்” என பதிவிட்டுள்ளார்.

34
ஹவுஸ்மேட்ஸ் படம் எப்படி இருக்கு?

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், படத்துல BGM செம்மையா இருக்கும். பல இடங்கள்ல மிரள வைக்கும், சில இடங்கள்ல கலங்க வைக்கும். படம் பாத்து முடிச்சதும் நிஜமாவே இசையமைப்பாளாரை தேடி ஒரு நன்றியும் பாராட்டும் சொல்லிட்டு வந்தோம். அப்போ தான் தெரிஞ்சது இவர் தான் பிரேமம் படத்தின் இசையமைப்பாளரும் கூட... சவுண்ட் உங்களுக்கு மிகப்பெரிய Experience ஆ இருக்கும் இந்த படத்துல. வித்தியாசமான கதைக்களம், அதை சாமானியனும் ரசிக்கும்படி செம்மையா குடுத்துருக்காங்க என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

44
ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்

படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது : ஒரே வீடு, இரண்டு கதைகள், பேய், அறிவியல், பேண்டசி, காமெடி, திருப்பம் என கலகலவென படம் ஓடுகிறது.கிளைமாக்ஸ் உருக்கம், காளிவெங்கட், வினோதினி நடிப்பு, தர்ஷன், அர்ஷ நடிப்பு அருமை. இது பேய் படம்தான். ஆனா ஒரு சுவர், நிறைய கதை சொல்கிறது. அதில் இரண்டு குடும்பங்கள் பேசுகின்றன. இந்த வகை திரைக்கதை தமிழ் சினிமாவுக்கும் புதுசு. காதல், காமெடி, திரில்லிங், செண்டிமெண்ட் எல்லாம் இருக்கு. இனி எப்1 பிளாட்டை பார்த்தால் ஹவுஸ்மேட்ஸ் நினைவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories